என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முன்னாள் மாணவர்கள் சந்திப்பு"
- அரசு நடுநிலைப்பள்ளி இந்த நடுநிலைப் பள்ளியில் கடந்த 1995-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை படித்த 30 முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- இந்த நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ளது துத்திப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி. இந்த நடுநிலைப் பள்ளியில் கடந்த 1995-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை படித்த 30 முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஓசூர், நாமக்கல், கோவை போன்ற பல்வேறு இடங்களில் வசித்து வரும் இவர்களை தனபால் மற்றும் வெங்கடாசலம் ஆகியோர் ஒருங்கிணைத்து பள்ளிக்கு வரவழைத்தனர். இதில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் தங்கள் இளமைக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு தங்கள் மரியாதையை செலுத்தி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று அவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினர். அதேபோல் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர். ஆண்டுதோறும் இதேபோன்று ஒன்றிணைந்து பள்ளி வாழ்க்கையை நினைவு கூற வேண்டும் என்று பலரும் விருப்பம் தெரிவித்தனர்.
தொடர்ந்து முன்னாள் மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 27 வருடங்களுக்கு முன்பு எடுத்துக் கொண்டதை போல தங்கள் ஆசிரியர்களுடன் மீண்டும் புகைப்படத்தை எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நிகழ்ச்சியில் முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்தினரோடு கலந்து கொண்டனர்.
- முன்னாள் மாணவ- மாணவிகளின் குழந்தைகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1994 முதல் 1996-ம் ஆண்டு வரை கல்வி பயின்ற முன்னாள் மாணவ- மாணவிகள் 27 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் ஆசிரியர்களான சுவாமிதாஸ், முருகவேல், மேரி , மயில் அம்மாள், தற்போதைய தலைமை ஆசிரியர் அன்னக்கிளி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களது குடும்பத்தினரோடு கலந்து கொண்டு, பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் முன்னாள் ஆசிரியர்களுக்கு மாணவ- மாணவிகள் சார்பாக நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவ-மாணவிகள் தாங்கள் பயின்ற வகுப்பறையை சுத்தம் செய்து வண்ணம் தீட்டி பூக்களால் அலங்கரித்தனர். முன்னாள் மாணவ- மாணவிகளின் குழந்தைகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். மேலும் விழாவிற்கு வருகை தந்த அனைவரும் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.
- கடந்த 1982-84ம் ஆண்டுகளில் 11, 12-ம் வகுப்புகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது
- இதில் 40 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்து கொண்டதால் ஒருவருக்கொருவர் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 1982-84ம் ஆண்டுகளில் 11, 12-ம் வகுப்புகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 40 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்து கொண்டதால் ஒருவருக்கொருவர் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தை பார்வையிட்ட முன்னாள் மாணவர்கள் பின்னர் புகைப்படம் எடுத்து கொண்டனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் உள்ள துரைசாமிபிள்ளை சிலைக்கு முன்னாள் மாணவர்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பள்ளிக்கு மாணவர்கள் அமரும் இருக்கைகள் வழங்கபட்டது.
இதில் சென்னை மாநகர உதவி காவல் ஆணையர் ராஜசேகர்,பள்ளியின் தலைமை ஆசிரியர் பால்சாமி உள்ளிட்ட ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
- இங்கு கடந்த 1973-ம் ஆண்டு 11-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- இதில் 50 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்து கொண்டதால் ஒருவருக்கொருவர் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நத்தம்:
நத்தத்தில் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 1973-ம் ஆண்டு 11-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் 50 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்து கொண்டதால் ஒருவருக்கொருவர் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தை பார்வையிட்ட முன்னாள் மாணவர்கள் பின்னர் புகைப்படம் எடுத்து கொண்டனர். இதில் பள்ளியின் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
- பிளஸ்-2 படித்த நண்பர்களின் சந்திப்பு கூட்டம் கடத்தூரில் உள்ள நடைபெற்றது.
- கடந்த கால நிகழ்வுகளையும், பள்ளி அனுபவங்களையும் நினைவு கூறி மகிழ்ந்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1994-ம் ஆண்டு பிளஸ்-2 படித்த நண்பர்களின் சந்திப்பு கூட்டம் கடத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் படித்த மாணவ-மாணவிகள் தற்போது பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணாக்கர்கள் தங்களுடைய கடந்த கால நிகழ்வுகளையும், பள்ளி அனுபவங்களையும் நினைவு கூறி மகிழ்ந்தனர்.மேலும் 23 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- முன்னாள் மாணவர்கள் தங்கள் மனைவி, பிள்ளைகளுடன் கலந்து கொண்டு பள்ளி நண்பர்களுடன் கலந்துரையாடினர்.
- தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களின் பெருமைகள் குறித்து பேசினர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே நல்லூர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியில் 1989-ம்ஆண்டு படித்த முன்னாள் மாணவ ர்களின் மறு சந்திப்பு நிகழ்ச்சி ஆலங்குளம்-துத்திகுளம் சாலையிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
50 முன்னாள் மாணவர்கள்
நிகழ்ச்சிக்கு டெல்லி ஐ.ஐ.டி. கணிதவியல் துறை பேராசிரியர் டாக்டர் தர்மராஜ் தலைமை தாங்கி னார். பேராசிரியர் லட்சுமண பாண்டியன், கோவை சித்த மருத்துவர் சண்முக பாண்டி யன், ஆசிரியர் சாமுவேல், விவசாயி மகிழம்பூ, சென்னை மாநகரா ட்சி நடுநிலைப்பள்ளி தலை மை ஆசிரியை கலா சாந்தகு மாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாண வர் ஜேம்ஸ் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் மனைவி, பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் உற்சாகமாக கலந்து கொண்டு தங்கள் பள்ளி நண்பர்களுடன் பழைய நினைவுகளையும், தற்போது பணியாற்றும் பணிகள் குறித்தும் பகிர்ந்து கலந்துரை யாடினர். மேலும் தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரிய ர்களின் பெருமைகள் குறித்து பேசினர்.
நிகழ்ச்சி ஒருங்கிணை ப்பாளர்களாக தர்மராஜ், கலா சாந்தகுமாரி, மகேஷ், நாதன், ஜேம்ஸ், நமச்சிவாயம், லட்சுமண பாண்டியன் ஆகியோர் செயல்பட்டனர்.
- சதுரங்கப்பட்டினத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஒன்று கூடினர்.
- பள்ளி காலத்தில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை ஒருவருக்கொருவர் பேசி பகிர்ந்துகொண்டனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1972-1974-ஆம் கல்வி ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்களாகவும், வணிகர்களாகவும், விவசாயிகளாகவும், அரசுப் பணியாளராகவும், தொழில் அதிபர்களாகவும் உள்ளனர்.
60 வயதை கடந்த இந்த முன்னாள் மாணவர்கள் 51 பேரும், 50 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ் அப் குழு மூலம் தகவல்களை பரிமாறியதுடன், சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்தனர். இந்த சந்திப்பின்போது, தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களை கவுரவிக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து 50-ஆம் ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு 60 வயதை கடந்து பேரன், பேத்திகளுடன் வாழ்ந்து வரும் முன்னாள் மாணவர்கள் 51 பேரும் சதுரங்கப்பட்டினத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஒன்று கூடினர். அப்போது பள்ளி காலத்தில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை ஒருவருக்கொருவர் பேசி பகிர்ந்துகொண்டனர்.
மேலும், தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களுக்கு நன்றிக் கடன் செலுத்தும் விதமாக 80 வயதை கடந்த தங்கள் ஆசிரியர்களுக்கு வெற்றிலை-பாக்கு, பழம், பட்டுவேட்டி, பட்டு புடவையுடன் கூடிய சீர்வரிசை கொடுத்து நெகிழ்ந்தனர். தங்கள் மனைவிகளுடன் வந்திருந்த ஆசிரியர்கள் அனைவரும் 80 வயதை கடந்தவர்கள், 60 வயதிலும் தங்களை மறக்காத மாணவர்களின் நன்றி உணர்வுகளை மெய்சிலிர்த்து பாராட்டினர். பின்னர் அனைவரும் ஒன்றாக நின்று குழு படம் எடுத்து மகிழ்ந்தனர்.
- பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்
- கேக் வெட்டி ஒன்றாக மதிய உணவு அருந்தினர்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 30 ஆண்டுகளுக்கு பின் இன்று ஒன்று கூடி கட்டித்தழுவி ஆரவாரம் செய்து பிரிந்தனர்.
அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 1992-94-ம் கல்வியாண்டில் படித்த 52 மாணவர்கள் ஒன்று கூட முடிவு செய்தனர்.
அதன்படி இன்று காலை முதல் ஒவ்வொரு நண்பர்களும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் படித்த அரக்கோணம் அரசு ஆண்கள் வந்தனர்.
52 பேரில் சுமார் 45 பேர் பள்ளியில் ஒன்று கூடி தங்களது பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மதியம் பள்ளி நண்பர்கள் சேர்ந்து கேக் வெட்டி ஒன்றாக மதிய உணவு அருந்தினர்.
தங்கள் படித்த பள்ளிக்கு நினைவாக மைக்செட்களை தற்போதைய பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கி குழுவாக புகைப்படம் எடுத்து கொண்டனர்.
- காமராஜ் தொழில்நுட்பக்கல்லூரியில் 36 ஆண்டுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு விழா நடந்தது.
- தற்போது பல்வேறு துறைகளில் பணியாற்றியும், பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தியும் வருகின்றனர்.
பெரும்பாறை:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், பழவிளையில் செயல்பட்டு வரும் மதுரை நாடார் மகாஜன சங்கத்திற்குட்பட்ட காமராஜ் தொழில்நுட்பக்கல்லூரியில் 36 ஆண்டுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு விழா நடந்தது.
விழாவில் 1984-87-ம் ஆண்டுகளில் படித்த 13 பேர் 36 ஆண்டுகளுக்கு பின்பு கொடைக்கானலில் சந்தித்தனர். இதில் முன்னாள் மாணவர்கள் சந்தித்து பேசினர். இவர்கள் தற்போது பல்வேறு துறைகளில் பணியாற்றியும், பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தியும் வருகின்றனர்.
பின்னர் தங்களுடைய அன்பு, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
- பங்கு பெற்ற மாணாக்கர்கள் தங்களுடைய கடந்த கால நிகழ்வுகளையும் கல்லூரி அனுபவங்களையும் நினைவு கூறி மகிழ்ந்தனர்.
- முன்னதாக ஆராய்ச்சி மைய இயக்குனர் மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத்துறை சார்பாக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இத்துறையில் 2015 முதல் 2022-ஆம் ஆண்டு வரை பயின்ற மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கு பெற்ற மாணாக்கர்கள் தங்களுடைய கடந்த கால நிகழ்வுகளையும் கல்லூரி அனுபவங்களையும் நினைவு கூறி மகிழ்ந்தனர்.
முன்னதாக ஆராய்ச்சி மைய இயக்குனர் மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினார். துறைத் தலைவர் பேராசிரியர் கோவிந்தராஜ் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் கிருத்திகா வரவேற்புரை நிகழ்த்தினார். இறுதியாக முனைவர் சரண்யா நன்றி உரையாற்றினார். தற்போது ஆங்கிலத் துறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
- முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா பேச்சு
- வி.ஐ.டி.யில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது
வேலூர்:
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் குடியரசு தினத்தையொட்டி விஐடி வேந்தர் டாக்டர் கோவிசுவநாதன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களிடையே பேசினார்.
அதைத்தொடர்ந்து விஐடியில் குடியரசு தினத்தையொட்டி ஆண்டுதோறும் நடைபெறும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இப்ராஹிம் கலிபுல்லா பேசுகையில், ஊழலற்ற நேர்மையான நன்னடத்தை கொண்ட சமுதாயமாக நாம் அனைவரும் இருக்க வேண்டும்.
கல்வி ஒன்று மட்டுமே மனித இனத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் கருவியாக செயல்படுகிறது. கல்வியால் மட்டுமே மனிதனை அறியாமையில் இருந்து விடுவிக்க முடியும் என்றார்.
விஐடி வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் பேசுகையில்:- உலகில் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில் அனைவருக்கும் கல்வி கிடைப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
தேசிய புதிய கல்விக் கொள்கையில் அனைவருக்கும் உயர்கல்வியில் சேரும் சதவிகிதம் தற்போது 27 ஆக உள்ளது, இதை 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்.
இதில் தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் ஏற்கனவே 27 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது என்றார்.
விழாவில் கவுரவ விருந்தினராக எம்பசிஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் (மனித வளம்) சதீஷ் ராஜரத்தினம், வி ஐ டி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி. செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி ச. விசுவநாதன், துணைவேந்தர் டாக்டர். ராம்பாபு கோடாலி, இணை துணை வேந்தர் டாக்டர். பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் டாக்டர். ஜெயபாரதி, விஐடி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.
- தேசிய, மாநில அளவில் நடைபெறுவது குறித்தும் விளக்கம் அளித்தார்.
தருமபுரி,
தருமபுரி தொன் போஸ்கோ கல்லூரியில் குடியரசு தினத்தன்று முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.
கல்லூரி தொடங்கப்பட்ட 2007-ஆம் கல்வியாண்டு முதல் இந்நாள் வரை, படித்த மாணவ-மாணவியர்கள் சந்திக்கும் பொருட்டு நடைபெற்ற இந்நிகழ்விற்குக் கல்லூரிச் செயலர் எட்வின் ஜார்ஜ் தலைமை வகித்தார்.
தொன் போஸ்கோ முன்னாள் மாணவர்கள் கூட்டமை ப்புப் பற்றியும், அதன் செயல்பாடுகள் உலக மற்றும் தேசிய, மாநில அளவில் நடைபெறுவது குறித்தும் விளக்கம் அளித்தார்.
முதல்வர் ஆஞ்சலோ ஜோசப் கல்லூரியின் முன்னேற்றத்திற்கு நிர்வாகம் மேற்கொள்ளும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், அவற்றில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்புக் குறித்தும் எடுத்துரைத்தார்.
துணை முதல்வர் பாரதி பெர்னாட்ஷா, பொருளாளர் ஜான், சமூகப் பணித்துறைப் பேராசிரியர் ஆண்டனி கிஷோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவ-மாணவியர் தங்கள் வகுப்புத் தோழர்களையும், தோழிகளையும் சந்தித்து மகிழ்வதற்கும், நலம் அறிவதற்கும், வாழ்வியல் நிலை அறிவதற்கும் ஏற்ற வகையில் அமைந்த இந்நிகழ்வில் மாணாக்கர்கள், ஆசிரி யர்கள், வகுப்பாசிரியர்கள், துறைத்தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்துக் கல்லூரி காலத்து அனுபவ ங்களையும், தற்போதைய தம்முடைய பணி, குடும்பம், சமூகப் பொருளாதார நிலை முதலியன குறித்த அனுபவங்களையும் தாம் பயின்ற துறையின் வளர்ச்சி க்கும், முன்னேற்றத்திற்கும் உரிய ஆக்கப்புர்வவமானக் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் ராஜேஸ்வரி, இயற்பியல் துறைத்தலைவர் சேகர் மற்றும் துறைப் பேராசிரியர்கள் இணைந்து ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்